உன்னால்என் மதிமுகத்தின்
மேடு பள்ளங்கள் - உன்
ஞாபகங்களால் நிரப்பப்பட்டுக்
கொண்டிருக்கின்றன !

இலையுதிர் காலத்தின்
வெக்கைக்குள்ளும் - உன்
ஞாபகங்கள்.................
ஈரலிப்புக்குள் தான் உறைந்து கிடக்கின்றன!

பிறர் கண்படாது................
பூமி ரேகைக்குள்  உனைப்
பத்திரப்படுத்தியே
என் கைரேகைகள் பாறையாகின!

உணர்வுகளால் - நீ
வரையும் ஓவியம் - என்
கனவு முகத்தின் விம்பமாய்
அழகு காட்டும் !

ஊடலில் அடிக்கடி என்
விழிச்சாறு பிழியும் வில்லன்
நீயென்றாலும்................
மனசேனோ - உன்
மானசீக நெருடலில் தானின்னும்
அப்பிக் கிடக்கின்றது !
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை