விதவை


கருக்கலைக்கப்பட்ட கனாக்கள்
கல்லறைச் சுவருக்குள்
நசுங்கிப் போகும்!

ஓட்டை விழுந்த வாழ்க்கைக்குள்
ஒட்டடைகள் தொங்கிக் கிடக்கும்
வெள்ளைக்குள் விழுந்தவுடலும்
மங்களம் துறந்து வாடும்

முரண்பட்ட விதியால்
விரண்டோடும் பௌர்ணமிகள்....
அமாவாசைகள் மட்டுமே
அப்பாவியாய் எட்டிப்பார்க்கும்!

சகுனங்கள் சரித்திரம் பேசும்
தரித்திரங்கள் உடன்பிறப்பாகிப் போகும்!
பரிவில்லாத் தேசத்தில்
வாழ்வும்
இற்றுப் போகும்  !

நாங்கள்...........................
வாழ்வைத் தொலைத்தவர்கள்!
மயானங்களில் மௌனம் தேடும்
மானசீகவாதிகள்!2 comments:

  1. இதயத்து சோகங்கள் மாறாத வடுவாய்....

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை