அன்பனுக்காய்அன்பு.......!

என்
ஒவ்வொரு இரவுகளிலும்
உன் னன்பு காற்றில் நசிந்து
சுவாசமாய் விட்டுச் செல்கின்றது!

அன்பால்...
நீ
கொடுத்த எண்ணங்கள்
தினமும்
என்னைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றன!

அன்பை
மாத்திரமே போதிக்கு முன்
வழிப் பயணத்தில் - என்
காலடித் தடங்கள்
சங்கமித்துக் கிடக்கின்றன!

அன்பு...
நம்முள்
காதலாய்....
நட்பாய்....
பாசமாய்...
வாழ்கின்றது!

ஒரு
குழந்தையாய்..
குமரியாய்...
மனைவியாய்...
தாயாய்....

உன்னைச் சுமக்கும் என்
ஒவ்வொரு பொழுதுகளும்....
கரைந்தே போகின்றது - நம்
அன்பில்!

காதலுக்கு வயதில்லை
சொல்லித் தந்தாய் அழகாய்!

அதனாற்றான் என்னவோ- இப்
பிரபஞ்ச மேடை
காத்திருக்கின்றது
நம்மைச் சுமக்க - அதன்
எல்லைப்புள்ளி வரை!

3 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. வணக்கம்
  காதல் கவிதை படிக்கும் போது தித்திக்கிறது... பிரபஞ்சத்தில் மணமேடை விரைவில் மலரட்டும் எப்போதும் எனது வாழ்த்துக்கள் மலர் தூபட்டும் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை