About Me

2014/07/25

முகநூல் எண்ணங்கள் - 7




நம் மௌனத்தின்போதும் ஒருவரால் நம் அன்பைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தால், அவரின் உண்மையான அன்பு நமக்குச் சொத்தாகக் கிடைத்துள்ளது என்பது அர்த்தம்....
-------------------------------------------------------------------------



நீ எனும் ஒற்றைச் சொல்......என்
வாழ்வின் முற்றுப்புள்ளி!

---------------------------------------------------------------------------

சுயநலம் அதிகமாகும்போது சூழ்ந்திருக்கும் அன்பர்களும் தொலைந்து போகின்றார்கள்!

--------------------------------------------------------------------------


ஒரு மனிதர் அணியும் பதவி, அந்தஸ்து, அவசர முடிவுகள் எனும் முகமூடிகளால் இழக்கப்படுவது என்னவோ நிம்மதிதான்!

--------------------------------------------------------------------------

சுகங்கள் பரிமாற ஆயிரம் பேர் காத்திருக்கலாம்
ஆனால்.....
சோகங்கள் பரிமாறும் அனைத்து அன்புள்ளங்களும் நமக்குக் கிடைக்கும் இன்னுமொரு தாய்மடியே!

--------------------------------------------------------------------------

எந்த ஒரு காரியம் அல்லது செயலைச் செய்யும்படி அடுத்தவர் நம்மைப் பணிக்கும்போது உடனே நமக்குள் மனக்குழப்பம் ஏற்படும்.

"இதனை நம்மால் செய்ய இயலுமா"

மலைப்பு மறுப்பாக மாறிவிடும்.

ஆனால்...............

சில நிமிடங்களின் பின்னர் , நமக்கு நாமே சமாதானமாகி 'கிடைத்த வாய்ப்புக்களை'ச் சவால்களாகக் கருதி செயற்படத் தொடங்கி விடுவோம். எந்தச் செயலாக இருந்தாலும்,

"முடியும்"

எனும் தன்னம்பிக்கை போதும். அவை வெற்றியின் அறுவடைகளை நமக்கு அள்ளித் தரும்.

-------------------------------------------------------------------------



தாயின் கருவறை முதல் கல்விச்சாலை...
கற்றலின் அனுபவ கூடம் வாழ்க்கைச்சாலை!
ஏடு மட்டும் கற்றவன் தோற்றுப் போகின்றான்...
வாழ்வைக் கற்பவன் அடுத்தவனுக்குப் பாடமாகின்றான்!



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!