About Me

2014/07/25

முகநூல் துளிகள் - 8




கடினமான செயல்களுக்கே எப்பொழுதும்
மதிப்பான வெற்றிகள் காத்திருக்கின்றன!
----------------------------------------------------------------------


நாம் நேசிக்கும் உறவை...
பிரியவிடாமல் காத்துக் கொள்ளுதல்கூட
"அன்பின் அதிகாரம்" தான்!
----------------------------------------------------------------------


நம் வாழ்வினோட்டம் 24 மணி நேரம் அடங்கிய கடிகாரப் பெட்டியின் ஓட்டத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது. ஏனெனில் நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்தும்போது மன திருப்தி கிடைக்கின்றது. இதனால் நம் வெற்றிகள் கால வரலாற்றில் சொற்களாகப் பதிக்கப்படுகின்றது..

ஆனால்....

காலத்தை வீணாக்கும்போதும், காத்திருக்கும்போதும் நமது நேரம் மிக மெதுவாக செலவளிக்கப்பட்டு, நமது செயல்கள் மந்த நிலை்க்கு மாற்றப்படுகின்றது. இதனால் நாம் வெறும் கற்கள்போல் சமைந்து விடுகின்றோம்..

எனவே நாம் உருவாக்குவது......!

சொற்களா?
கற்களா?

தீர்மானிப்பாளர்கள் நாம்தான்!
------------------------------------------------------------------------



நம்பிக்கை என்பது வெறும் வரி வடிவமோ, அல்லது பேச்சொலிகளின் தொகுப்போ அல்ல..

மாறாக...

நம் அன்றாட வாழ்வில் தலைகாட்டும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகான நம்மைத் தூண்டச் செயவதுடன், நமது சக்தியை சாதனைகளாக மாற்றும் ஆசான்!

"நம்பிக்கை கொண்டோர் வாழ்வில்
தளம்பல் தோன்றுவதே இல்லை!
-------------------------------------------------------------------------



நமது ஒரு நிமிட கோபத் துடிப்புக்கள்தான் நரகத்தின் நுழைவாயில்..
ஏனெனில் கோபம் வந்தால் நம் வார்த்தைகளின் அகோரம் நமக்குப் புரியாது..பகைமைக்குள் அது நம்மைத் தள்ளி விடும்..

நாம் பிறர் மீது அன்பு கொண்டால் அதுதான் இன்பத்தின் திறவுகோல்..
ஏனெனில் அன்புதான் நம்மைப் பண்படுத்தி மனதைப் பசுமைப்படுத்தி வசந்தங்களை நம்முள் பரவச் செய்கின்றது.

எனவே......

கோபமோ.......அன்போ...

நாம் பேசும் வார்த்தைகள், செயல்களில்தான் இருக்கின்றது.

எனவே நாம் பேசும் வார்த்தைகள் நம்மைச் சார்ந்தோரை வசீகரிக்கட்டும்!! கோபத்தை விரட்டியடிக்கட்டும்!
------------------------------------------------------------------------



சிந்தனையின் அடிப்படையில் நம்மை உருவாக்குபவர்கள் நாம்..
செயல்களின் அடிப்படையில் நம் வாழ்வை வழிநடத்துபவர்கள் நாம்..
முயற்சியின் துடிப்பில் வெற்றிக்காக உழைப்பவர்கள் நாம்..
எனவே...
நம்மை நாம் உயர்வாகப் பார்க்கும்போது....
நமது முதல் நட்பும், வழிகாட்டியும் நாம்தான்!
-----------------------------------------------------------------------

மௌனம் ஓர் மொழிதான்.....
ஏனெனில் .......
பிறர் பேசுவதை  நாம் கேட்பதற்கான பயிற்சியை அது நமக்கு வழங்குகின்றது

-----------------------------------------------------------------------



ஒரு காரியத்தை உடனடியாகச் செய்ய ஆரம்பிப்பார் பலர்....
ஆனால்.....
சிலரேதான் தாம் தொடங்கிய காரியத்தை நேர்த்தியாகச் செய்து முடிப்பார்.
இவர்கள்தான் வெற்றிக்கான அடையாளங்கள்...

-----------------------------------------------------------------------


தோல்விகள்தான் நமக்குச் சவால்!
ஏனெனில்.....
தோற்றுப்போன ஒவ்வொரு கணங்களும் - நம்
வெற்றியைத் தூண்டும் அதிர்வுகள்!

--------------------------------------------------------------------



பிகாஸோவின் ஓவியம்.....
பீதோவின் இசைவரிகள்.....
இவற்றையும் விட நீ இனிமையானவன்!
ஏனெனில்......
நானுன்னை நேசிப்பதால்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!