நம் ஒவ்வொருவரிடமும் உள்ள திறமைகளை உரிய நேரங்களில் பொருத்தமான சந்தர்ப்பங்களில் வௌிப்படுத்தும்போது, பிறருக்கு நம் தனித்துவம் அடையாளப்படுத்தப்படுகின்றது.
நம்மிடமுள்ள நல்ல விடயங்களை நாமே , ஆராய்ந்து , தவறுகளைத் திருத்தி நம்மை மீண்டும் மீண்டும் உருத்துலக்கி நமக்கே உரித்தான பயணப்பாதையில் பயணிக்கும்போதுதான் வெற்றி நம் வசமாகின்றது!
பிடிக்கின்ற சண்டைகளெல்லாம்
ஓரிரு நிமிடங்களில் கற்பூரமாய்.....
கரைந்து மறைந்து விடுகின்றது உண்மை அன்பில்!
------------------------------------------------------------------------
வலிகள் எல்லாம் வெற்றியின் வழிகளென்றால்..
ஔிமயமான எதிர்காலத்திற்காக எத்தனை துன்பங்களையும் தாங்கலாம்!
-----------------------------------------------------------------------
அன்பு என்பது வெறும் உணர்வல்ல....
அர்ப்பணிப்பு!
தாம் நேசிப்பவர்களை உண்மை அன்புடன் நோக்கும்போது, அங்கு அர்ப்பணிப்பும் இயல்பாக ஊடுறுவி விடுகின்றது...
எதிர்பார்ப்புக்களையும் கடந்ததுதான் உதவி...
ஆனால்....
லேசில் கிடைக்கின்ற எந்தவொரு உதவியையும்
லேசில் மறந்து விடுவார்கள் உதவி பெற்றவர்கள்!
இதுதான் உலக நடப்பு!!
-----------------------------------------------------------------------
நல்லது செய்து தோற்றால்
அதுகூட வெற்றியின் விளிம்பே!
சந்தோஷம் அப்போதும் தேடி வரும்!
ஏனெனில்........
தோல்வி என்பது சிறந்த உழைப்பிற்கான ஓர் செய்தி!
------------------------------------------------------------------------
ஒருவரின் மனவலிமையின் அளவுதான் அவர் சந்திக்கும் சம்பவங்களை சாதனைகளாக மாற்றும் உந்துசக்தியாக அமைகின்றது...
வட்டத்தின் தொடக்கப்புள்ளிதான் குற்று...
குற்றுக்கள் பல சேர்ந்தால் அதன் இறுதிச் சேர்க்கை வட்டம்......
நட்புக்கள் அல்லது உறவுகளுக்கிடையே ஏற்படும் சின்னச் சின்ன விடயங்களின் முரண்பாடுகள்தான் பெரிதாகி, பலரின் வாழ்க்கை மையத்தின் அச்சாணியாம் நிம்மதியை உடைத்து விடுகின்றது!
எனவே.....
தேவையற்ற விடயங்களை மனதில் ஏற்றி மன அழுத்தங்களுக்கு உள்ளாகாமல் இயல்பாக வாழ பழகிக் கொண்டால், நிம்மதியும் சந்தோஷமும் நம்மை விட்டு நீங்காது!
-------------------------------------------------------------------------
முரண்பாடுகளிலும்
உடன்பாடு கண்டு....
உதிரம் தோறும் பொறுமை கலந்து...
உயிரெங்கும் அன்பைத் தோய்த்து
வாழும்போது...
நம்பிக்கைச் சாரளம் மெல்ல திறக்கும்
கனவுகள் மெய்ப்பட வழி காட்டி...
வைரமாய் ஜொலிக்கும்
நம் வாழ்க்கையில்...
சருகுகளாய் கவலைகள் எதற்கு...
அடடா.....
வாழ்க்கை வாழ்வதற்கே!
வாழ்ந்துதான் பார்ப்போமே!
--------------------------------------------------------------------
அவசரம் ஓர் உணர்ச்சிப் பிழம்பு...
நம் அவசரங்களில் பல அவசியங்கள் காணாமல் போய் விடுகின்றன!
--------------------------------------------------------------------
தன் மூச்சுக் காற்றுக்குள்ளும் பாசமூட்டி
கருப்பைக்குள்ளும் நம்மை....அரவணைத்து
தரணிக்கு அர்ப்பணிக்கும் அன்பு....
அம்மா!
--------------------------------------------------------------------
என் பூப்போன்ற கண்களில்
கவிழ்ந்து கிடக்கும் உன்மீதான அன்பை
அவிழ்த்து விடுகின்றேன்.....
நீயே அறியாம லிப்போது!
--------------------------------------------------------------------
உன துரு என் கனவுகளில் கலக்க
இரவு கரைவதே தெரியாமல்........
விழித்திருந்தேன் உன் நினைவுகளுடன்!
--------------------------------------------------------------------
உருவம் பார்த்து பழகும் உள்ளம்
ஊனம் வடியும் மாசு பள்ளம்!
--------------------------------------------------------------------
சூழ்நிலைக் கைதிகள் நாம்...
அதனாற்றான் சூழ்நிலைகள் நமக்குச் சாதகமாக இல்லாவிடில், அந்த மன அழுத்தத்தை நம்மைச் சார்ந்தோர் மீது திணித்து விடுகின்றோம்.
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!