சாதனையாளர்களின் சரித்திரப் பக்கங்களை வாசிக்கையில் எந்தவொரு சாதனைகளும் இலேசில் கிடைப்பதில்லையெனத் தோன்றும். அந்த வெற்றியாளனின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற கடினமான உழைப்பு நம் கண்களுக்குள் தெரியும். மானசீகமாக உழைக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் வெற்றியைத் தேடுகின்ற நம்பிக்கை இருக்குமாயின் கிடைக்கின்ற ஒவ்வொரு சிறு வெற்றிகளுமே நமது வாழ்வையே மாற்றியமைக்கின்ற சக்திகளாக மாறி விடுகின்றன.
உயரப் பறக்கின்ற பறவையின் முதல் அடி கூட மெல்லிய தத்தித் தத்திப் பறப்பதற்கான முயற்சிதான். நம்பிக்கையுடனான அந்தப் பயிற்சிதான் நீண்ட வானில் சுதந்திரமான உலாவுகைக்கான உத்வேகமாக மாறுகின்றது. நாமும் சாதனையாளர்களாக மாறுவோம்.
ஜன்ஸி கபூர் - 26.04.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!