About Me

2020/06/19

அன்பே இன்பம்

கோடி உழைத்து மாடியில் உல்லாசம்/
வாடி நிற்குமே அன்பு காணா மனை/
ஓடி யுழைத்த செல்வங்களின் செருக்கில்/
நாடி நிற்போர் ஏழையே அன்பில்லாவிடின்/ 
கூடி வாழ்கையில் உவகை கொண்டோர்/
முடியாய் தருவார் உரிமைகளை  அடுத்தார்க்கே/  

மரணங்கள் தேடும் வாழ்வின் விருப்பாம்/
அரவணைத்துச் செல்லும் உறவுகளோடு மகிழ்தலாம்/
இரக்கத்தோடு இதயம் தொடும் நட்பும்/
சிரம் தாழ்த்துமே  வாழ்வின் பயனென்றே/ 

தசைகளுடன் முரணின்றி என்பும் இரத்தமும்/
இசைந்த உடலின் இயக்க வீச்சில்/
இதயம் மொழிகின்ற அன்பைப் பெற்றோர்/
வதையில் துடிப்பார் பிரிவுத் துயரில்/
சிதையில் வெந்த வலியில் கண்ணீர்/
பதைபதைத்தே அடுத்தார்க்குக் காட்டுமே அன்பை/  

கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வமாம்/
எடுப்பார்க்கும் தித்திக்கும் உடன் அமுதமாம்/
தொடுத்து நிற்கும் மனதின் விருப்போடு/
அடுத்தவருடன் பொருந்தி வாழ்வதும் பேரழகே/ 

அருமையான உயிரும் அன்போடு பொருந்துகையில்/
தோல்விகள் தொடாது வெற்றிகளே முழக்கமிடும்/
அல்லலும் அகன்றிட  அகமதும் தெளிவாகும்/
புகழோடு இன்புற்றிருக்கும் வாழ்வும் நமதாகும்/

 ஜன்ஸி கபூர்

கவிதைக்கான கரு: இரும்பான இதயத்தையும் கரும்பாகப் பிழிந்து தரும் அன்பு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் அன்புடைமை என்ற அதிகாரம்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!