இயற்கை கற்றுத் தருகின்றதே வாழ்வோட்டம்
அறத்தோடு ஒழுகி வாழ்வதே கொண்டாட்டம்
அகத்தில் சுயநலம் வந்திட்டால் திண்டாட்டம்
இல்லாமையை உடைக்கையில் இதயங்களின் மகிழ்வோட்டம்
அல்லலை விரட்டும் கரங்களில் உயிர்ப்போட்டம்
வள்ளலின் நிழலில் வறுமையின் நகர்வோட்டம்
உள்ளங்கள் பேசுகையில் அன்பின் ஈர்ப்போட்டம்
கூடி வாழ்கையில் நன்மைகள் வருடுமே
தேடி உதவிடும் மனிதம் தெய்வமே
வாடியோர் சிரித்தால் வசந்தம் பூக்குமே
தேடிடும் சொந்தமாய் பொதுநலம் தொடருமே
மன்னிக்கும் குற்றங்கள் சாந்தியில் உறையுமே
வன்முறைகளை உடைக்கையில் அமைதி வெல்லுமே
அயலாரை நேசிப்போம் அகிலம் நமதாகும்
சுயநலம் தவிர்ப்போம் சுகங்கள் தானாகும்
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!