About Me

2020/06/19

உறவைத் தேடும் கிளி

 வானம் விரிந்திருக்கும் வாழ வழியிருக்கும்
கனவுகள் கலந்திருக்கும்  காதல் விழியோரம்
கண்ணாளன் வருவான் காத்திருப்பில் நெடுநேரம் 
உணர்வின் தேடுதலில் உயிரும் வாடுதே

சோள வயலிலே முத்துக்கள் வெடித்திருக்கும்
சோடிக்கிளியைக் காணவில்லை  சோகம் குவிந்திருக்கும்   
அலகிலே கதிர் அந்தரத்தில் உயிர்
சலசலக்கும் நீரோடையும் தேடுதோ இணையை

பட்டமரப் பொந்திலே கட்டிய வீடு
வட்டநிலா வெளிச்சம் அங்கே பாசத்தோடு
பட்டுச்சிறகு அணைத்திடும் காதல் நெஞ்சோடு
கிட்ட இருந்தால் ஆறுதலே வாழ்வோடு

சொந்தம் துணையிருந்தால் சொர்க்கம் நிறைந்திருக்கும்
காந்தம் கவர்ந்திழுக்கும் அன்பில் கறையேது
சிந்தையிலே ஈரமுண்டு பகிர்ந்துண்ணும் நேரமிது
எந்தன் மச்சானே வந்துவிடு அந்திக்குள்ளே

ஜன்ஸி கபூர்  




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!