2020/06/14
அந்தரத்தில் ஆடும் சிவப்பு நிலா
மொட்ட மரம் மெட் டிசைக்க/
கட்டி வச்ச ஊஞ்சலிலே நிதம்/
எட்டி நின்றே கொஞ்சிப் பார்க்கிறே/
வெட்கப்பட்டு கொஞ்சம் சிவக்கும் புள்ள/
மனசு மஞ்சள் வானமாய் நீளுதே/
கனவும் உனக்காகத் தவிக்குதே துடிக்குதே/
என் உசுருப் பூவைப் பிழிஞ்சேன்/
விண் தேடி தழுவுதடி மேகமாய்/
அனலாய் கொதிக்குது வானும் கடலும்/
அணைத்துக் கொஞ்சடி பனி வீசி/
ஓசோன் உடையுது தொற்றும் பரவுது/
ஒளிஞ்சுக்கலாமா கண்ணே வா வயல்வெளியில்/
அந்தரத்தில் ஆடாதே அருகில் வாடி/
மந்திரப் புன்னகையில் மயங்கித்தான் போனேனே/
சந்திரவெளியில் உலாவ ஏங்குதடி மனசும்/
வந்து விடவா சொந்தமே நீதானே/
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம்
ReplyDeleteகவிதைமிக அருமை வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனங்களில் நிறைந்தவனே.: எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே சொந்த தமிழில் செந்தமிழ் பாடி அகிலம் வாழும் தமிழர் மனங்களில் நிறைந...
தங்கள் பின்னூட்டத்திற்கு மகிழ்வுடன் நன்றிகள்
ReplyDelete