அழுக்கும் பழகிய அவல வாழ்வு
நழுவாமல் ஈர்க்கின்ற வறுமைப் போராட்டம்
தழுவாத உறவுகளால் உரிமையான வீதியோரம்
எழுதப்படாத விதியாக அழுத்திச் செல்கின்றதே
உணர்வுக்குள் பிசையப்பட்ட மனித நேயங்கள்
உலாவும் பூமிக்குள் புளாங்கித மழை
உதரத்தின் ஓலத்திற்கு உரமாகும் கரங்களே
உள்ளத்தின் மாண்பை உயிர்த்திடுமே சிகரமாய்
நிலையற்ற வாழ்வுக்குள் அலைகின்ற துன்பங்களை
கலைக்கின்ற கருணையும் விலையற்ற பொக்கிஷமே
பாலைவன வெயிலையும் குளிர்த்திடும் பாசத்தினில்
சாலையோர யாசகமும் உயிர்த்திடும் தினமும்
இரக்கத்தில் இசைகின்ற மனங்களில் என்றுமே
இறைவனின் நேசமும் நிறைத்திடும் உதயத்தினை
இதயத்தின் அன்பினில் இன்னலும் கரைந்திடும்
இறந்தும் மறக்கப்படாதே உதவும் கரங்கள்
ஜன்ஸி கபூர்
G5bd gfb
ReplyDelete