சாதி பேதமின்றி வழங்கிடு நீதியை/
வாதங்கள் வெடிக்கும் பூவும் புயலுமாய்/
அக்கிரமத்தின் எடையை உடைத்திடு துணிந்து/
ஆணவமும் அநீதியும் கேட்டின் கண்கள்/
ஆணையிட்டே அறுத்தெறியட்டும் உனது வாளும்/
வன்புணர்வும் வன்முறையும் வக்கிரச் சூழ்ச்சியாம்/
தண்டிக்கத் தயங்காதே கரமேந்திய தர்மத்தால் /
நிமிர்ந்தே சொல் நியாயம் வெல்லட்டும்/
நிம்மதி பூத்தே மானுடமும் மகிழட்டும் /
தீயோரைக் கொழுத்திடும் தீயும் நீயே/
தீன்சுவை தடவும் அமிர்தமும் நீயே/
விதியின் பாதையில் எழுதப்படும் பொய்கள்/
விரண்டோடட்டும் சட்டக் கோப்பின் யாப்புக்கண்டே/
மிரண்டோடட்டும் கயவரும், கலியுலக மன்னர்களும்/
கரமிரண்டும் காத்து நிற்கட்டும் நீதியைத்தான்/
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!