நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற அழகான அன்பு வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் ரசிக்க வைக்கின்றது. அன்பின் அதிர்வுகள் தருகின்ற இன்பங்கள் மனதில் வண்ண மயங்களாகின்றன.
நமது எதிர்பார்ப்புக்களையும், ஆசைகளையும், கனவுகளையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் விழுங்கும்போது அமைதிக்குள் அடங்கி விடுகின்றோம். வலுவான மௌனத்தின் பிடிக்குள் நம்மைச் சிறை வைக்கின்ற அத்தருணங்களில்கூட, அழகான அன்பின் பிம்பங்கள் நம் மனதை மகிழ்வூட்டுகின்றதென்பதே யதார்த்தம்.
ஜன்ஸி கபூர் - 21.04.2021

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!