(குறள் - 65)
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
இல்வாழ்வும் தந்திடும் குழந்தைச் செல்வமே/
இனித்திடும் இன்பமாம் இவ்வுலக வாழ்வில்/
குழந்தையின் தழுவலில் துளிர்க்குமே மகிழ்வும்/
மழலையின் மொழியினைச் சுவைத்திடுமே செவியும்/4
உளத்தையும் உடலையும் அணைக்கின்ற மக்களால்/
உணர்கின்ற இன்பமே துன்பத்திற்கான மருந்தே/
சேயின் மெய்தீண்டலில் வழிந்தோடும் வலியும்/
சேர்த்திடுவர் களிப்பினை மக்கள் செல்வத்தினர்/ 8
(குறள் - 68)
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
பிறப்பின் பயனாம் பெற்றோருக்கும் நன்மக்களாவது/
சிறப்பான உயர்வும் தந்திடுமே இன்பமே/
அறிவின் உயர்ச்சிக்குள் உயிர்த்திடும் பிள்ளையால்/
ஆனந்தமே துளிர்க்கும் பெற்றவர்கள் நெஞ்சுக்குள்/4
தன் பிள்ளையின் உயர்வின் மலர்ச்சியில்/
துன்பம் கரைத்து மனமும் களிப்பிலாடும்/
அறம்தானே அகிலத்தின் உயிர்களுக்கும் இன்பமளித்தல்/
அகமகிழ்ச்சிக்குள் அனைவரையும் இசைத்திடுமே அறிவுடைமை/ 8
ஜன்ஸி கபூர்
குறள் 971:
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
#ஒளிஒருவற்கு_உள்ள_வெறுக்கை_இளிஒருவற்கு
#அஃதிறந்து_வாழ்தும்_எனல்.
ஊக்கத்தின் உயர்வினில் பெருமை
பிறர் செய்திடாத நற்செயல்களை நானும்/
செய்திடுவேனெனும் ஊக்கம் கொண்டோரே தம்முள்/
பெற்றிடுவார் பெருமையெனும் நற்பண்பினைச் சிறப்பாக/
அன்றேல் அவ்வூக்கமின்றி வாழ்தலே போதுமென்று/
சிந்தைக்குள் கருத்தினைப் பெற்றே இழிந்திடுவோர்/
இணைத்திடுவார் உளத்தில் உளக்குமுறலெனும் மாசினை/
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!