தரைக்குள் பூக்கின்ற முகமூடி மாந்தர்கள்/
விரைகின்ற நிமிடங்களுக்குள் கரைக்கின்றனர் வஞ்சங்களை/
அஞ்சாரே பாவக் கறைகளைப் பூசிடவே/
கொஞ்சிடுவார் துரோகங்ளும் விழிகளில் புன்னகைக்க/
அழகிய ஆன்மாவுக்குள் நெளிகின்ற புழுக்களால்/
அணைத்திடுவார் பாசத்துடன் காரிய வெற்றிக்கே/
தழுவிடும் மனங்களில் தந்திரமாக வீழ்ந்தே/
பாழும் கிணற்றில் பக்குவமாக வீழ்ததிடுவார்/
மெய்க்குள் பொய்களை நிரப்பி வாழ்ந்தே/
பைக்குள் பணத்தினை நிரப்பிடுவார் வேடமிட்டே/
பல முகத்தோடு பறந்திடும் பறவைகளாகி/
கலந்திடுவார் ஏமாற்றங்களை ஏற்ற தருணத்திலே/
மதியால் விதியை அழகூட்டி களிப்புறுவார்/
சதியையும் தீட்டுவார் சந்தோசம் காட்டியே/
உறவாகி விரிக்கும் சிறகுக்குள் அக்கினியை/
உரசிடுவார் வேட(ம்)ந் தாங்கல் பறவைகளாகி/
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!