சாதனைகள் சாகா வரம் பெற்றவை. உள்ளத்தில் உதிக்கின்ற எண்ணங்களுக்கு தன்னம்பிக்கையுடன் தொடர் முயற்சியும் பயிற்சியும் வழங்குகின்றபோது அங்கு வெற்றியின் வாசம் மனதினை நிறைக்கின்றது.
அடுத்தவர்களால் இயலாததொன்றை தன் இலட்சியமாகக் கொண்டு சாதிக்கின்ற வீரர்களை பிரமிப்புடன் நாம் பார்க்கின்றோம்.
எதனையும் சாதிக்கலாம். நம்மிடம் அதற்கான நம்பிக்கை மலையளவு நிறைந்திருக்கின்றபோது.....
அந்த வகையில்
தற்போது இலங்கை ஊடகங்களில் பேசப்படுகின்ற பெயர் ரொஷான் அபேசுந்தர
கடந்த 11.04.2021 இல் புதிய சாதனையை நிலைநாட்டினார்.
தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் மீண்டும் அங்கிருந்து தலைமன்னாருக்கும் 59.3 கிலோமீற்றர் தூரத்தை 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்கள் 43 செக்கன்களில் பாக்குநீரிணையில் நீந்தி புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டினார்.
பிரம்மிப்பான கொந்தளிக்கும் கடலலைகளையும் தன் ஆற்றலால் வசப்படுத்தி சாதனை புரிந்த இந்த இலங்கை விமானப் படையின் நீச்சல் வீரரை நாமும் வாழ்த்துவோம்.
அதே நேரம் 1971 ஆம் ஆண்டு 51 மணித்தியாலங்களில் மேற்கூறப்பட்ட சாதனையை நிகழ்த்தியிருந்த குமார் ஆனந்தனும் நினைவூட்டப்படுகின்றார்.
ஓவ்வொரு முயற்சிக்கும் ஊக்கமாக காணப்படுகின்ற சுவடுகளும் நினைவூட்டப்படுகின்றன.
ஜன்ஸி கபூர் - 12.04.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!