About Me

2021/04/13

உலா வரும் நிலா

 3. வயலும் வாழ்வும்

++++++++++++++++++
உழும் வயலால்  உயிர்க்கின்றதே நெல்லும்/
வாழும் வாழ்வில்  வளமும் சிறக்குதே/

மண்ணும் மணக்குது  மரங்களின் செழிப்பினில்/
விண்ணும் சிரிக்குது  விளைந்த வயலாலே/  

ஜன்ஸி கபூர் -5.12.2020

---------------------------------------------------------




பாராட்டு
************
பாராட்டும் பொழுதெல்லாம்/
துளிர்க்கின்றது தன்னம்பிக்கை/
வெற்றியைப் பெற்றிட/ 
பயணிக்கின்றது மனமும்/

ஜன்ஸி கபூர்- 7.12.2020
--------------------------------------------------------------------------




+++++++++++++++++++++++++++++++++++++ 
மனித சுயநலம் செதுக்கிய இக்கட்டான வாழ்க்கை 
*********************************************************
++++++++++++++++++++++++++++++++++++++
இயற்கையின் அழிப்பால் மாற்றமடையுதே வாழ்க்கை முறையும் 
++++++++++++++++++++++++++++++++++++++
 ஜன்ஸி கபூர் - 7.12.2020
-------------------------------------------------------------------



கொஞ்சும் அன்பால் பிஞ்சு  விரல்கள்/
நெஞ்சச் சுமையை வருடும் போது/
வலிக்கின்ற மனமும் ரசிக்கின்றதே மழலையை/

ஜன்ஸி கபூர் - 7.12.2020
-------------------------------------------------------------------------------------------

உலா வரும் நிலா
*********************
விண்ணும் மணக்குதே வெண்ணிலாவே/
கண்ணும் வியக்குதே எழிலினிலே/
எண்ணம் மகிழ்கிறதே உன்னாலே/
உன்னை வடிக்கின்றேன் கவியினிலே/

ஜன்ஸி கபூர் -9.12.2020
------------------------------------------------------------------



கூட்டுக்குடும்பம்
-------------------------------
அன்பால் சூழும் அழகிய உறவுகள்/
இன்பம் தருமே இதயமும் மகிழுவே/
************************************** 
கூடி வாழும் கூட்டுப் பறவைகள்/
வாடி நிற்கையில் வாட்டம் தீர்க்குமே/
************************************** 
ஜன்ஸி கபூர் - 11.12.2020
---------------------------------------------------------------------------




சூரிய ஒளி
++++++++++++
கிழக்கில் பரவும் ஒளி/
உழைப்பை விதைக்கிறது/  
ஒவ்வொரு விடியலுக்குள்ளும்/ 
விடியாத வாழ்க்கையும் உண்டு/

ஜன்ஸி கபூர் - 12.12.2020
-------------------------------------------------------------------------




கனவுகள் 
********** 
ஆழ் மனதின் எண்ணங்கள் விரியும்/
அர்த்த இராத்திரி நிழல்க் குடையில்/
அதிசயித்தே பிரம்மிக்கும் நம் கண்கள்/
அதிகாலை விடியலில் விலகியே ஓடும்/
அழகிய விம்பங்களாகி நினைவுகளில் நீளும்/

ஜன்ஸி கபூர் - 17.12.2020

கனவுகள் 
***************
அர்த்த இராத்திரி நிழல்க் குடையில்/
ஆழ் மனதின் எண்ணங்கள் விரிகையில்/
அதிசயித்தே பிரம்மிக்கின்றன நம் கண்களும்/
அதிகாலை விடியலும் கண்டுகொள்ளாத கனாக்கள்/
நீள்கின்றன நினைவுகளில் நம்மைப் பற்றியபடி/
---------------------------------------------------------------------------------------




ஆதியும் அந்தமும்
------------------------------
ஏக்கம்
+++++++
ஏக்கம் தழுவிய நீள் விழிகளில்/
பூத்த கனவுகள் அலைகின்றதே சுகமாக/
நெஞ்சினில் தேங்கிய ஆசைகளின் அதிர்வுகளால்/
வஞ்சியின் பொழுதெல்லாம் மலர்கின்றதே ஏக்கம்/

ஜன்ஸி கபூர் - 17.12.2020

---------------------------------------------------------------------------------------------------



புழுதிப் புயல்/
திடீரென திசைமாறிப் போகின்றது/
மக்கள் போராட்டம்/

ஜன்ஸி கபூர்  - 17.12.2020
------------------------------------------------------------------------------------------




தன்னம்பிக்கை
**********************
வெற்றிக்கான வேட்கையை/
உள்ளத்தில் கொண்டேன்/
முடியும் எனும் நம்பிக்கைக்குள்/
தடைகள் உடைந்தன/

ஜன்ஸி கபூர் - 19.12.2020
 


 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!