முதுமையும் தாய்மையுமென முகங்காட்டும் யாசகங்கள்/
முகவரியாம் வறுமைக்குள் முக்காடிடும் அவலங்கள்/
இரந்திடும் கரங்களுக்குள் இரக்கமே உணவளிக்கும்/
இதயத்தில் அன்புள்ளோர் இன்னலைத் துடைத்திடுவார்/
ஏழ்மைத் தணலில் ஏக்கங்கள் புகைய/
ஏனிந்த விதியோ ஏற்றமில்லா வாழ்வுக்குள்/
ஏழை எளியோர் ஏந்தும் கரங்களுக்கு/
உதவிகள் செய்வோர் உயர்ந்தவர்களே என்றும்/
நவீனத் தேடலுக்குள் நகர்ந்திடும் உலகில்/
நடுங்கும் தேகங்கள் நடைபாதை ஓரங்களில்/
நாளும் பொழுதுமாக நாடுவார் தர்மத்திற்காக/
நல்மனங்களின் கருணையும் நற்செயலாகப் பூத்திடுமே/
ஈகையளிப்போர் என்றுமே ஈடேற்றமே காண்பார்/
ஈருல மாண்பும் ஈட்டிடுவார் சிறந்தே/
உயிர்களைப் பேணும் உன்னதமாம் தர்மம்/
உம்மையும் என்னையும் உயர்வாய்க் காத்திடுமே/
ஜன்ஸி கபூர் - 8.11.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!