About Me

2021/04/13

வீழ்வாயோ தமிழே

 


தமிழே தவமெமக்கு தரணிக்கும் பாலமது 

தாயின் மூச்சுக்காற்றால் தத்தானதே நித்திலத்தில் 

செங்கரும்புச்சாறு பிழிந்தே செதுக்கிய எம்தமிழே 

செல்லுமிடமெல்லாம் ஒலிக்கின்றதே செந்தமிழின் நாதம் 


உயிரும் மெய்யுமாகி உணர்வுக்குள் உறைந்தே 

உயிர்க்கின்றாய் அழகாக உன்னத மொழியாகியாகி 

தொடக்கப்புள்ளியாய்க் குவிந்தே தொடர்கின்றாய் வாழ்வினில் 

தொன்மைத் தமிழென மகுடமேந்தி தித்திக்கின்றாய் 


சிங்கமொழியே சிரிக்கின்றாய் அங்கத்தின் மூச்சுக்காற்றாகி 

சிந்தைக்குள் குளிர்ந்தே சித்தமெங்கும் நிறைகின்றாய் 

வீழ்வாயோ தமிழே வீழ்த்திடுமோ நவீனமும் 

விரிகின்ற பொழுதெல்லாம் விரிகதிர் நீதானே 


ஜன்ஸி கபூர் - 05.11.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!