About Me

2012/08/10

மாற்றங்களும் ஏமாற்றங்களும்


சுஹிர்தா............!

அவள் நகரிலுள்ள பிரபல்யமான தொலைத் தொடர்பகத்தில் சேவையாற்றிக் கொண்டிருந்தாள். மாதாந்தம் என் கைபேசி பாவனைக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்காக அந்நிறுவனத்திற்கு அடிக்கடி  செல்வதுண்டு. ஆரம்பத்தில் நிறுவன வாடிக்கையாளர் பிரதிநிதியாகப் புன்னகைத்தவள் நாளடைவில் நட்புடன் பேசத்தொடங்கினாள்.. அரிதான புகைப்படங்களை மின்னஞ்சல் வழியாக எனக்குப் பரிமாறுமளவிற்கு எங்கள் நட்பு  இறுக்கமடைந்திருந்தது.

அவள் எனக்குள் அறிமுகமாகி மூன்றாண்டுகள் உதிர்ந்து விட்டன. அழகான மெழுகுச்சிலை போன்ற உடல் வார்ப்பும், பளிச்சென்ற வெண் தோலும் அவளை எனக்குள்ளுமொரு அழகியாகவே பறைசாற்றியது. அவள் சூழல் கல்வி கற்ற மொழித் தாக்கத்தால் அவள் பாவனை மொழியாக ஆங்கிலமும் சிங்களமும்  நுனி நாக்கில் தவழும். அவள் என்னுடன் ஒருநாளும் தமிழில் பேசியதில்லை.

அந்நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்காக நான் செல்லும் போதெல்லாம் அவளுடன் இரண்டு வார்த்தைகளையாவது பேசாமல் வருவதில்லை. எனது அலுவல் முடிந்ததும் அங்கு சனக்கூட்டம் குறைந்திருக்கும் நேரத்தில் சிறிது நேரம் எங்கள் சொந்த விடயங்களைப் பற்றியும் கதைத்து விட்டு வருவேன்.

ஓருநாள்  அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். கைபேசி சிணுங்கியது . தன் மென்விரலால் கைபேசியை அழுத்தியவள் "ஹலோ" வென்றவாறே என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"என்  லவ்வர்தான் லைனில் நிற்கிறார் ..........பேசுங்க அவர் உங்களுக்கும் தெரிந்தவர்தான்"

நான் எதிர்பார்க்காமலே தன் 3ஜி கைபேசியை என்னுள் திணிக்க, நான் தடு மாறிப்போனேன்.

 "பரவாயில்ல சுஹி ! "

நான் மறுத்த போதும் வற்புறுத்தி என்னை அவனுடன் பேசவைத்தாள். அவனும் வீடியோ கோலில் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சகஜமாய் நலம் விசாரிக்கத் தொடங்கினான்"

"அவன்.......எனக்குத் தெரிந்தவன்..அவளது வருங்காலக் கணவன்............!"

மகிழ்ச்சியில் என் வாழ்த்துக்களை அவர்கள் வசப்படுத்திவிட்டுப் புறப்பட்டேன் என் வீட்டுக்கு!

தொடர்ந்து வந்த நாட்களில் அவள் காதலின் வளர்பிறைச் செழிப்பை எனக்குள் அடிக்கடி காட்சிப்படுத்துவாள்.

"எப்போ உங்கட கல்யாணம், என்னைக் கூப்பிடுவீங்க தானே"

ஒருநாள் நான் வேடிக்கையாகக் கேட்டேன்.

"இன்ஷா அல்லாஹ்! சீக்கிரம் முடிப்போம், நீங்க இல்லாமலா" காதலின் வசந்தத்தை அனுபவித்துச் சிரித்தாள். அவள் நாணத்தை அன்று ரசித்த போது அந்த அழகியின் இளமை பூத்த வெண் கன்னங்கள் செக்கச் சிவந்து கிடந்தன.

வருடங்கள் இரண்டு தாவியோடியது. நாங்கள் பல தடவைகள் சந்தித்தாலும் கூட அவளின் காதல் பற்றியும், அவனைப்பற்றியும்  துருவியாராயவில்லை. அவளும் எதுவும் சொல்லவில்லை. வாடிக்கையாளர்கள் தொகை அதிகரிப்பும், எம் வேலைப்பளுவும்  எங்களுக்கிடையில் சிறிய இடைவெளியை ஏற்படுத்தி நின்றது. கண்டால் கதைப்போம் ..........அதுவும் ஓரிரு வார்த்தைகளாகச் சுருங்கிப் போனது

அண்மையில் ஓர்நாள் வழமைபோல்  எனது கைபேசியழைப்பிற்கான மாதக் கொடுப்பனவைச் செலுத்த  அந்நிறுவனத்திற்கு காலையில் சென்றிருந்தேன்.  அவள் வழமைக்குமாறாக கவுண்டரில் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் புன்னகைத்தவாறே ஸலாம் கூறி சுகம் விசாரித்தாள்.  எங்களைப்பற்றி சிறிது நேரம் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்த போதுதான் அவதானித்தேன் அன்றவள் மிக அழகாகவிருந்தாள். கழுத்து ,கை, விரல்களில் புதிய தங்க நகைகள் மின்னிக்கொண்டிருந்தன.

"ஏதும் விஷேசமா.............இயல்பாய் நானும் கேட்க, "

சிறிது மௌனித்தவாறு "ம் ம் " எனத் தலையாட்டினாள்.

அவள் காதல் கைகூடிவிட்ட மகிழ்வை நானும் வாழ்த்துக்களாக்கி அவளுக்கு முன்வைக்கப் போகும் போது, இடைமறித்தாள்

அவள் குரல் உடைந்து தளர்ந்து போனது . தான் கல்யாணம் முடிக்கப் போறவர்  பற்றிய விபரங்களைச்  சொன்னாள்.

"என் லவ்வர் என்னைப் பிரிஞ்சு இப்ப ஒரு வருஷமாச்சு!. எங்ககிட்ட பிரச்சினை வந்திட்டுது....அவர்ட்ட நிறைய முரண்பாடுகளிருக்கு. காதலிக்கும் போது அது எனக்குத் தெரியல. ஆனால் கல்யாணத்துக்கு நெருங்கும் போதுதான் அவரோட சுயரூபம், சுயநலம் எல்லாமே வெளியில தெரிஞ்சுது, அவர எங்கட வீட்டாக்கள் வேணாமென்று சொல்லிட்டாங்க"

அவள் தன் சோகங்களை அவிழ்த்தபோது நான் பிரமித்துப்போனேன். அவர்கள் தங்கள் காதலில் காட்டிய உற்சாகமும், நெருக்கமும் நன்கறிந்தவள் நான். சுஹி அவனுக்காக தன் வாழ்வில் காட்டிய மாற்றமும் கூட எனக்குத் தெரியும். அவனது விருப்புக்கேற்பவே அவளது நடை, உடை, பாவனை கூட அவளிடமிருந்து மாறிப்போனது. பிரச்சினைகள் வாழ்வில் ஏற்படுவது இயல்பே! ஏதோ சில அற்பங்களுக்காகவும், அடுத்தவர்களுக்காகவும் அவர்களின் அன்பு   காணாமல் அழுகிப் போனதுதான் எனக்கு கவலையாகவிருந்தது. அந்தப் பிரிவுத் தாக்கமும், ஏமாற்றங்களும், கோபமும் அவர்களிருவரையுமே அந்தக்கனவு  வாழ்க்கையிலிருந்து வேரறுத்து மறுத்து வேறொரு திசைக்குள் தள்ளிவிட்டது.

அவளை நான் கண்ணிமைவெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். தன் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்த துன்பத்தை அவள் மறைத்தவளாக,

"திருமணத்தைப் பற்றியும், தனக்கு மாப்பிள்ளை வீட்டார் அணிவித்துச் சென்ற திருமண அடையாளத்தைப் பற்றியும் அவள் கூறத் தொடங்க நானோ அதிர்ச்சியிலிருந்தும் கலையாதவளாய் விக்கித்து நின்றேன்..

மனப் பொருத்தப்பாடில்லாத இருவர் திருமணத்தி லிணைவதை விட, பிரிந்து செல்வது மேல்தான். ஏனெனில் சொற்பகால வாழ்வின் சந்தோஷங்களை  அத்துன்பங்கள் எரித்துவிடுகின்றனவே!.

"பெருநாளைக்குப் பிறகு எனக்கு கல்யாணம் வைச்சிருக்கிறாங்க........உங்கள இன்வைட் பண்ணுவேன்.........கட்டாயம் வரணும் "

சுஹா தன்னைச்சுற்றி வரையப்பட்டிருக்கும் விதியின் போக்குகளை எனக்குள் அவிழ்த்துக் காட்ட முயற்சிக்க, நானோ, அவர்கள் கசக்கியெறிந்த அந்த காதல் ஞாபகங்களை எனக்குள் நிழற்படுத்தியவாறு மெதுவாய் வீதிக்குள் இறங்கிக்கொண்டிருக்கின்றேன்.  





வலைப்பூவில் வீழ்ந்த என் கவித் துளிகள்


என் இக் கவியார்வத்திற்கு ஊக்கம் தந்து, என் இலக்கிய பயணத்திற்கு தடமாக உங்கள் விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தந்த, தருகின்ற, தரும் சகல என் நட்புள்ளங்களுக்கு நேச நன்றி பல

இன்று வரை கவிதாயினி வலைப்பூவில் பதிவான என் கவிதைகள் ஒரே பார்வையில் :-
---------------------------------------------------------------------------------------------

          001. பிறப்பிட நிழலிலே
 
          002. கவிதைக்காரா 

          003. ரகஸியமாய்
   
          004. வலி
 
          005. நவீனத்துவம்   

          006. வருவாரோ 
 
          007. ஊடலேனோ 

          008. வெளிநாட்டு வாழ்க்கை
 
          009. போ நீ போ 

          010. மின்னல்

          011. சுனாமி 
   
          012. முதியோர் இல்ல முகவரிகள்

          013. தாய்மை
   
         014. திறந்து பார்க்காதே   

         015. நிலா நிலா ஓடி வா 
       
         016. காதலித்துப் பார்

        017. நீ

        018. உறக்கம்

        019. ஞாபகம் வருதே

        020. யதார்த்தம்

        021. மணவேலி

        022. நீயே என் உயிராகி

        023. போராளி

        024. பிரிவலை

        025. என்னால் முடியும்

         026. இவர்கள்

         027. பேரினவாதம்

         028. மழை

         029. மே தினம்

         030. முற்றுப்பெறாத பயணம்

        031. புதிர்

        032. என் தாயே

       033. ஏக்கம்

       034. தனிமை

       035. வறுமை தேசம்

       036. நண்பனே

       037. ஏட்டுக்கல்வி

       038. காதலும் அவஸ்தையும்
        
       039. பெப்ரவரி

       040. அன்னைக்கு விண்ணப்பம்

       041. மலரே

      042. முதிர்கன்னி

      043. தேசத்தின் மகுடம்
   
      044. பயணம்

      045. எப்போதும் நீ

      046. ஒரு நாளும் உனை மறவாத
                           
      047. அடிக்கடி
       
      048. அருவி
     
       049. பெண் மனசு

       050. ஒளி நாயகன்
     051. ஓர் நாள்

     052. முதுமையினில்

     053. ஞாபகம் வருதே

     054. அன்றும் இன்றும்

     055. தோழமைக்காக

     056. மாற்றம்
       
     057. மனசெல்லாம்

     058. ஒற்றையாய்

     059. மௌனம்

     060. காத்திரு

    061. சொர்க்கத்தீவு

    062. அட செல்லமே

    063. சிறகறுந்து

    064. மனசு

    065. வருடும் நினைவு
   
    066. சிப்பிக்குள் முத்து

    067. பரீட்சை

    068. பேபி அஸ்கா

    069. ப்ரிய சகி

   070. வந்ததே ரமழான்

   071. தன்னம்பிக்கை

   072. நினைவகம்

   073. ஒற்றை மழைத்துளி

   074. இயற்கை உன் வாசம்

  075. மழைத்தோரணங்கள்

  076. என் அழகிய தேசம்

  077. இரவின் மடியில்

  078. விடியல் பொழுதில்

  079. நிஜங்களின் வலி

  080. உன்னில் நான்

  081. சிறகு விரிக்கின்றேன்

  082. உணர்வோசை

  083. சின்னத்தாமரை

  084. என் தேவதை

  085. அன்பின் வலி

  086. உயிரறுந்து

  087. கவிதை + காதல் = காதலி

  088. ப்ரிய சகி

  089. அழகான பெண்டாட்டியே

  090. முரண்பாடு

  091. இதயம் கிழிந்து

  092.விதியின் காலடியில்

   093. ஆதவன்

   094. பிரிவில்

   095. உன்னால்

   096. நீயின்றி

   097. தகுமோ சொல்

   098. தேர்தல்

    099. செல்வம்

    100. அன்னை

   101. பெண் அவலம்

   102. கண்ணீர்ச்சிலை

   103. கவி தந்து போனவனுக்காய்

   104. அழகி

   105. சொந்தம் எப்போதும்

  106. விதவை

  107. கார்ட்டூன்

  108. மயக்கம்

  109. நினைவெல்லாம் நீ

  110. ஒற்றைச் சொல்

  111. ஆசை ஆசை

  112. விஷமிகள்

  113. வாழ்க பல்லாண்டு

  114. மரணப்பூக்கள்

  115. என்று தணியும்

  116. மழை நின்ற பொழுதில்




- Ms.A.C.Jancy -





2012/08/09

நினைவெல்லாம் நீ


என் நினைவோரங்களில்
நிழலாடுமுன்னை ...........
களவாய் இறுக்கிப் பிடித்தே
கன்னம் தேய்த்தேனின்று........
கதறினாய் காதலில் நசிந்து
இறுக்காதே இன்னும்
நானுன்னில் தானிருக்கின்றேனென!

நறுக்கென்றோர் குட்டு
எனக்கிட்டாய்!
இருட்டிலுமுன் குறும்பு விழியோரம்
விசமம் பூட்ட
ஏதுமறியாதவளாய் நானும் .........
மௌனித்துக் கிடந்தேனுன்னருகில்!
மெல்லவென்னுயிரில் அலைந்தே
கன்னமிட்டாய் வாஞ்சையுடன்!

குட்டியது யாரோ............!- என
எட்டி நின்ற என்னையும் நீயிழுக்க
வட்ட நிலாச்சாறும் கசிந்தே
சட்டென்றே என்னுள் பரவ....
இட்டத்துடன் பற்றிநின்றாய்- என்
இடைவெளிகள் மறுத்தே தான்!

இடை  நெரித்து  நீயும்  ........
தடையேதுமின்றியென்
குரல்வளைக் காற்றிலுன் மூச்சை நசித்து
வருத்துக்கின்றாய் காதல் அனலால் -உன்
பருவச் செழிப்பையென்னுள் பாய்ச்சி
இருவரும் ஒருவராய் மாற!

போடா...........!
பொறுக்கியென்றேன்!!
தினமுன் னன்பை என்னுள் நீ
பொறுக்கியெடுப்பதால்!

சிலிர்த்து நின்றாய் சிங்கமாய் !
வலித்திடாமல்  கன்னம் கிள்ளி
சிறுக்கி மகளே..............உனை
இறுக்கியே என்புடைப்பேன்
மிரட்டிச் சொன்னாய் மிருதுவாய்
என் பெயருரைத்து!

பருவத்து பூவெடுத்து- உன்
புருவத்தில் சூடியவளே!
இன்னுமா நானுன்னைப்
பிரிவேனென்றாய்.............

பிரியேனொருபோதுமுனை  - அகிலச்
சூரியக்குழம்பு குளிர்ந்திட்டாலும்
மறவேனுன்னையென
வார்த்தைகளில் நேசம் நிரப்பி
கோர்த்திட்டாய் என்னுசிரினிலே!

ஏனடா நமக்குள்ளிந்த மயக்கம்
என்னடா செய்திட்டாயென்னை!
ஏக்கத்தின் பெருமுச்சில் நெஞ்சம் புடைக்க
பாராடா எனையென்றேன்- என்
பாரின் சுழற்சியவன்
கரங்களைப் பற்றிக் கொண்டே!

உன்னோடு பகிர்ந்தது
உன்னோடு இறந்ததென-என்
உசிருக்குள் முத்தச் சூடேற்றி
வசிகரித்துச் சென்றிட்டான் காதலாய்!

மறைந்திட்டாய் திடீரென!
நாளை வருவேனென  - என்
கருத்தினிலுன்னை  நிறைத்தபடி!
நொடிகள் யுகங்களாய் நகர
நாடியில் விரல் பதித்து
தேடி நிற்கின்றேனுன் திசையோரம்!

ஜன்ஸி கபூர் 




பகை வேண்டும் புகையில்!


அழகான வாழ்க்கையின் ஆனந்தம் ஆளுக்காள் வேறுபடுகின்றது. நம் வாழ்வின் ஆரோக்கியம் நம்மால் சீரழிக்கப்படும் போது துயரும், நிம்மதியின்மையும் நமது சொத்தாகின்றது. அற்பமான சந்தோசத்தில் தம் ஆயுளை இழக்கும் பலர் புகையிலையுடன் நட்பைப் பேணி வருவது ஆரோக்கியமற்ற செயலே!

"நிச்சயமாக அல்லாஹ் , ஒருவர் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை அவர்களை மாற்ற மாட்டான்" ( திருக்குர்ஆன் 13:11)

எனவே அழிவுப் பாதையில் நாம் பயணிக்கும் போது , அதனை உணர்ந்து வாழ்வை திசை திருப்பி நம்மை நாமே  பாதுகாத்துக் கொள்ள  வேண்டும். மனிதனை அழிக்கும் சக்தி வாய்ந்த பொருட்களுள் புகையிலையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் அமெரிக்கர்கள் புகையிலையை காயங்களைச் சுத்தப்படுத்தவும், தொற்று நீக்கவும் பயன்படுத்தினர். 1847 ல் "பிலிப் மொரிஸ்" என்பவரே புகையிலையைப் பயன்படுத்தி சிகரெட் தயாரித்தார்.


1953 ல் டாக்டர் எமல் என்பவர் சிகரெட் பாவனையால் புற்றுநோய் ஏற்படுவதை கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து 1964 களில் அமெரிக்க அரசு புகைபிடிப்பதால் சுகாதாரத்திற்கு கேடு எனும் நோக்கில் சிகரெட் விற்பனைக்கெதிராக சட்டம் இயற்றியது. 

1988 ம் ஆண்டு பின்லாந்தும்,1994 ல் பிரான்சும் புகையிலை விளம்பரத்துக்குத் தடை விதித்தது.

மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய இரண்டாவது காரணிகளுள் ஒன்றாக புகையிலை விளங்குகின்றது.

வெற்றிலையுடனும், மூக்குப் பொடியுடனும் சேர்த்து பாவிக்கப்படும் புகையிலையை பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற வடிவங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

புகையிலை என்றதும் நம் நினைவுக்கு வரும் சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் உண்டு. இப் பொருளுடன் மேலதிகமாக பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிக் , அமோனியா , நாப்தலமைன், போலோனியம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களும் உடலோடு சேர்கின்றன. இந்நச்சுப் பொருட்களுள் பல வெடிகுண்டு செய்யப் பயன்படுபவை. எனவே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சிகரெட்டும் ஓர் வெடிகுண்டே! இதிலுள்ள 4000 இரசாயனப் பொருட்களுள் 43 இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. புற்றுநோயானது சுவாசப் பாதை வழியே கடும் தொற்றுதலை ஏற்படுத்துகின்றது.

புகையிலையிலுள்ள 4000 ற்கு மேற்பட்ட நச்சுப்புகையை சுவாசிக்கும் பலர் ஒரு நிமிடத்துக்கு 6 பேர் எனும் வீதத்தில் இறந்து போகின்றார்கள். ஆண்டுக்கு 60 லட்சத்துக்கும் மேல் பலியாகும் இப் புகையிலைப் பாவனைக்கு அதிகம் பலியாகுவது வளர்முக நாட்டவர்களே!

வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம், நண்பர்களின் இணைவு,ஸ்டைல், காதல் தோல்வி, தனிமை, மகிழ்ச்சி வாழ்க்கைப்பிரச்சினைகளை சமாளிக்க முடியாமை, பொழுதுபோக்கு எனத் தொடரும் சாதாரண புகைபிடிக்கும் பழக்கம் காலப்போக்கில் அவர்களை நிரந்தரக்குடிப்பழக்கத்திற்கும்  அடிமையாக்குகின்றது. 

புகை பிடிப்பதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் பின்வரும்  விகிதப் பெறுபேறுகள் கிடைத்துள்ளன

மகிழ்ச்சிக்காக                           - 22 %
பொழுது போக்குக்காக          - 8.2 %
விடுபட முடியாத காரணம்  - 17 %
பரீட்சித்துப் பார்க்க                 -  8.7 %
தனிமையைப் போக்க            - 10.5 %
மன அழுத்தம்                            -  10 %
பிரச்சினை                                   - 15 %



புகைப்பழக்கத்தின் மூலம் அனைத்து உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன. மாரடைப்பு, நுரையீரல்ப்புற்று, இரத்தக் கொதிப்பு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், வீரியக்குறைவும் போன்ற பல விளைவுகள் ஏற்படுகின்றன. அத்துடன் புகை பிடிப்பவர்களின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் என்பவையும் ஏற்படலாம். ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கத்தினால் அவர் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர். "புகை பிடிப்பது உடல நலத்திற்கு கேடு" என எச்சரிக்கை விடப்பட்டும் கூட அதனைப் பாவிப்போர் தொகை குறைந்தபாடில்லை.

நிறுத்தும் வழிகள்
--------------------------
உடனடியாக இதனை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஏனென்றால் தொடர்ந்து ஒரு செயல் செய்யப்படும் போது அது பழக்கமாக மாற்றமடைகின்றது. இப் பழக்கத்தை உடனடியாக முற்றாக நிறுத்த மனவுறுதியுடன் கூடிய கட்டுப்பாட்டு பயிற்சி அவசியம். இருந்தாலும் கூட "முயன்றால் ஆகாதது ஒன்றுமில்லை." என்பதற்கேற்ப  புகை பிடித்தலின் தீங்கின் பால் மனதை நிலைப்படுத்தி அதன் விளைவுகளை ஆராய்ந்து உணர்ந்து, மனவுறுதியுடன் அந்த ஆர்வத்தைத் தடுக்க வேண்டும். புகைக்கும் ஆர்வம் ஏற்படும் போதெல்லாம் வாயில் மெல்லும் சுவிங்கம், சாக்லேட், நீர், எலக்ட்ரானிக் சிகரெட், வாயில் ஒட்டிக் கொள்ளும் நிகோட்டின் கலந்த கம், பேஸ்ட் என்பவற்றைப் பயன்படுத்தலாம். படிப்படியாகக் கட்டுப்படுத்துவது தவறு ஓரேயடியாக அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு புகை பிடிப்பதனை நிறுத்தினால்
----------------------------------------------------------
20 நிமிடங்களில் புகை பிடிப்பவரது இரத்தஅழுத்தம், இரத்தவோட்டம் போன்றவை  சீராகும்.  8 மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள ஒட்சிசன், காபனீரொட்சைட்டு போன்ற சுவாசத்துடன் தொடர்பான வாயுக்களினளவு சீரடையும். 72 மணித்தியாலயத்தில் இச்செயற்பாடு காரணமாக நுரையீரல் உள்ளிட்ட சுவாசப் பாதையிலுள்ள பகுதிகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட ஆரம்பிக்கப்படும் .சுவாசிக்கும் திறனும் அதிகரிக்கப்படும். 9 மாதங்களில் இருமல், சளி என்பவற்றின் தாக்கமும் குறைகின்றது.ஓராண்டின் பின்னர்  மாரடைப்பு படிப்படியாக குறைய ஆரம்பிக்கின்றது, 10 வருடங்களின் பின்னர் சுவாசப் புற்று நோய் அறவேயில்லாமற் போகின்றது.

இலங்கை , இந்தியா போன்ற நம் நாடுகளில் புகைபிடிக்கும் பழக்கம் பெரும்பாலும் ஆண்களிடையேதான்  காணப்படுகின்றது.அரிதாகவே பெண்களிற் காணப்படுகின்றது. பலசிந்தனைச் சிற்பிகள் கூட இப் பழக்கத்தால் இன்று சீரழிந்து காணப்படுகின்றனர். தினந்தோறும் உழைக்கும் பணத்தில் ஓர் பகுதியை இதற்கென செலவளித்து உபாதைகளையும், துன்பத்தையும் விலை கொடுத்து வாங்கும் பழக்கம் இன்றைய நம் இளைஞர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இன்று புகைப்பிடிக்காத இளைஞர்களின் எண்ணிக்கை மிக அரிதாகவே காணப்படுகின்றது. விருந்துகளில் ஒன்று சேரும் இளைஞர்கள் புகைபிடித்தலையும், குடிப்பழக்கத்தையும் தம் அம்சமாக பெரும்பாலும் சேர்த்திருப்பார் என்பது மறுப்பதற்கில்லை.

புகையிலை நிறுவனங்களின் வர்த்தக தந்திரோபாயங்களும், புகைத்தலின் கேடு தொடர்பாக அக்கறைப்படுத்தப்படாத மனநிலையும் இன்றைய நவீன உலகில் புகை பிடிக்கும் பாவனையை அதிகரிக்கச் செய்துள்ளன. மறுபுறம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையில் 170 நாடுகள் புகையிலைக் கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்தும் வகையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.அரசானது விநியோகம், விளம்பரம் தொடர்பாக உரிய நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டுள்ளன.

ஆனால் புகைத்தலைத் தடை செய்தல் எனும் மிகப்பெரிய கனவினை நிறைவேற்றும் கடமையினை ஒவ்வொரு நாடும் உணர்ந்தாலும் கூட, இதன் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தை இழப்பதாக இல்லை. சிகரெட் போன்ற பொருட்களுக்கு அதிக வரி அறிவித்தும் கூட, அதிக விலை கொடுத்து வாங்கி தம்மை சீரழிக்க பலர் தயாராகவே உள்ளனர். எனினும் பாவனையைக் கட்டுப்படுத்தும் வெற்றி பொதுமக்களின் அர்ப்பணிப்பு மிகு உணர்ந்து கொள்ளலிலேயே தங்கியுள்ளது.

இவ்வாறாக புகை பிடிப்பதனால் ஏற்படும் தீங்குகளை மக்கள் முன் எடுத்துக் காட்டி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் மே மாதம் 31 ம் திகதி " சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக" அறிவித்துள்ளது புகையிலையினால் ஏற்படும் ஆபத்துக்களையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும். 

.புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட புகையிலை பாதிப்பினால் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கே அதிகளவு பணம் அரசுக்குச் செலவாகின்றது. தனி மனிதன் சமூகமாக,  சமூகத்தினரோ ஒன்றிணைந்து நாட்டின் அங்கத்தவராகின்றனர் . எனவே தனி மனித ஆகேகியமின்மையால் நாட்டின் நலமும் பாதிக்கப்படுகின்றது. 

நம்மவர்கள் சிந்திப்பார்களா.......புகையின் மீது பகை கொண்டு அதனை நிந்திப்பார்களா! காலம் பதில் சொல்லும் !